சக்திமான் அசோகன் கவிதைகள்- 16
............
சீதை காட்டுக்கே போனாலும்
வந்து விடுகிறார்கள்
ராவணன்கள்.
.........
துளைக்கிறது வண்டு
வலியால் துடிக்கிறது மூங்கில்
புல்லாங்குழல் பிரசவம்.
.......
மண்ணின் மையத்தில் தீக்குழம்பு
மனதின் மையத்தில் சுடுகிறது
ஓர் நினைவு.
,......
சக்திமான் அசோகன்
......
12-09-2024
......
No comments:
Post a Comment