சக்திமான் அசோகன் கவிதைகள் 17
..................
வெற்றி பெற்றாலும் கூட்டம்
தோல்வி அடைந்தாலும் கூட்டம்
சாராயக்கடை.
..........
பாட்டி இறந்தாள்
அவளுடன் உடன்கட்டை ஏறுகின்றன
அவள் சொன்ன கதைகள்.
.......
குழந்தை
வாயைப் பொத்துகிறார்கள் அப்பாவும் அம்மாவும்
கதவைத் தட்டுகிறான்
கடன் காரன்.
.......
சக்திமான் அசோகன்
.......
20-09-2024.
......
No comments:
Post a Comment