சக்திமான் அசோகன் கவிதைகள் -20
...........
எங்கும் அழகு
எல்லாமே அழகு
இதுதான் என் உலகு.
.......
கடல் மேல் எழுதிய காதல் கடிதம்
கண்களுக்குத் தெரியாது
கடலுக்கு மட்டும் புரியும்.
.......
சங்குக்குள் போனால் சங்கநாதம்
மூங்கிலுக்குள் போனால் வேணு கானம்
காற்று ஒரு மாயாஜாலம்
.......
கூலிக்கு மாரடிக்கும் உலகம்
குழந்தையின் சிரிப்பு யாருக்குத் புரியும்
வாடகத்தாய் சோகம்.
.......
கைப்பிடித்து அழைத்துப் போய்
கடலில் குளிப்பாட்டினேன் இரவை
கருப்பானது கடல்.
......
ஆற்றில் தண்ணீர் வரும்
அதைப் பார்த்த அக்கா குருவி அழும்
யாருக்குப் புரியும் அதன் சோகம்
.....
பசிக்கு சோறு போடாதவர்கள்
சவத்துக்கு வாய்க்கரிசி போடுகிறார்கள்
எல்லாம் சடங்கு.
......
தூண்டிலில் புழுவை காணோம்
புழு இருந்த இடத்தில்
துடிக்கிறது பேதை மீன்.
......
படகின் சுவட்டை நீர் அழித்தாலும்
பயணத்தை நிறுத்தாதே
சொல்கிறது துடுப்பு.
.......
எல்லாமே கூகுளுக்குத்தெரிகிறது
எதற்கு இனிமேல் கடவுள்
என்பவன் இறங்க தேடுகிறான் ஏணி.
......
சக்திமான் அசோகன்
......
நற்காலை நல் வணக்கம்
......
25-09-2024
......
No comments:
Post a Comment