Thursday, 26 September 2024

 சக்திமான் அசோகன்கவிதைகள்-21

.......

கொஞ்சம் தூரம் நடக்கிறது

பிறகு குதிக்கிறது

இலையில் விழுந்த பனித்துளி.

......

மழை மேலிருந்து தேடுகிறது

குடைக்குள் இருக்கிறது

சூடான தேநீர்.

.......

தெரிந்ததிலிருந்து தூங்குவதே இல்லை

அழைத்து வா என்கிறார் மருத்துவர்

வர மறுக்கிறது கடல்.

......

சக்திமான் அசோகன்

.....

26-09-2024

......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...