சக்திமான் அசோகன் கவிதைகள் -24
.......
எழுதுவதற்கு எத்தனையோ இருக்கிறது
எழுதாமல் விடுவதற்கும் எத்தனையோ இருக்கிறது
எழ வைக்கவேண்டும் எழுத்து.
......
காய் கனியாகிக் கொண்டிருக்கிறது
கனி காயாக மறுக்கிறது
சிரிக்கிறது விதை.
......
நெருப்பை முத்தமிட புழுவுக்கு ஆசை
நெருப்புக்கும் ஆசை
கேட்கிறது புத்தனின் சிரிப்பு ஓசை.
.....
சக்திமான் அசோகன்
.....
30-09-2024
.....
அதிகாலை நல் வணக்கம்
....
9445104404
....
No comments:
Post a Comment