சக்திமான் அசோகன் கவிதைகள்- 25
............
இலையெல்லாம் பச்சை தான்
சத்தியம் செய்கிறேன் நான்
பழுப்பின் நமட்டுச் சிரிப்பு
......
சோலைக்குயிலிடம் ராகபேதம்
சோகம் தந்துவிட்டுப் பிரிகிறது
அதன் ஆண் குயில்.
......
களைத்துப் போய்
கரை இரண்டையும் கைப்பிடித்து நடக்கிறது
நுரை போல் நரைத்த ஆறு.
......
சக்திமான் அசோகன்
.....
நற்காலை நல் வணக்கம்
.....
01-10-2024
.....
9445104404
.....
Nice👍 sir🎬❤
ReplyDelete