Thursday, 3 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள்- 26

.........

பாறையிடுக்குள் விழுந்த அரச விதை

படைக்கப் போகிறது

தன்னம்பிக்கை கதை.

.......

வலிக்காமல் தேன் எடுக்கும் தந்திரத்தை

வண்ணத்துப்பூச்சியிடம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை

கடிக்கும் கொசு.

.......

காட்டுக்குள் பூத்த காட்டுப் பூ

காத்திருந்து தானாகவே வாடி விடுகிறது

காதலனைக் காணாத காதலி.

.....

சிறிதாக தெரியும் கப்பல்

மெல்ல மெல்ல பெரிதாகி வருகிறது

அமாவாசைக்குள் சிக்கிய நிலவு

......

புதுமணப்பெண் நினைவுகள் கனவுகள்

புகுந்த வீட்டுக்கு சுமந்து வந்து கொண்டிருக்கிறது

அவள் தோட்டத்து நத்தை.

.......

கண்ணை மூடிவிட்டார்

கண்ணை மூடினால் கனவு வரும் என்று கதை சொன்ன

எங்கள் தாத்தா.

.......

வெளியே தவிக்கும் சாக்கடை

உள்ளே அனுமதிக்கிறது நீர் நிலை

குடிசைக்குள் வந்த ஒட்டகம்.

......

மழையை வெறுக்கும் பிரதேசம்

துணைக்கு அழைக்கிறது

சூரிய ஒளி. நேசம்.

........

பூச்சி மருந்தில் குளித்த பூக்கள்

தலை தெரிக்க ஓடுகின்றன ஈக்கள்

மழைக்காக தவம்.

......

அன்னையிடமிருந்து பிரியமறுக்கும் சிசு

ஆயுதம் ஏந்தி வருகிறார்கள்

ஆயாவுடன் செவிலி.

......

சக்திமான் அசோகன்

.....

03-10-2024

......

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...