சக்திமான் அசோகன் கவிதைகள் -27
...............
கிழக்கில் சூரிய பந்து
யாரோ உதைத்து மேற்கில் விழுகிறது
ஒரு நாள் ஆட்டம்.
......
வருவோர் நிழலில் தங்க
எதையுமே முளைக்க விடுவதில்லை
ஆலமரம்.
......
குட்டிக் குரங்கு தாவும் போது
தாயைக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும்
யார் சொல்லிக் கொடுத்தது
.......
இலை உதிர் காலம்
அம்மணமாய் இருக்கிறது மரம்
புத்தாடையுடன் வசந்தம்.
......
மடை திறந்த வெள்ளம்
மகிழ்ச்சி நுரையுடன் பள்ளி மாணவம்
அணைக்குள் அவ்வளவு புழுக்கம்.
......
உச்சியிலிடும் முத்தம் ஒன்றுமே இல்லை
உலகில் இந்த சுகத்திற்கு ஈடு இணை இல்லை
வருடும் தாயின் நாக்கு.
......
என்னிடம் திட்டு வாங்குகிறான்
என் முன் முட்டி போடுகிறான்
மாற்றுத்திறனாளியைப் படைத்த இறைவன்.
......
தோற்றவன் காட்டுக்குள் போனான்
அங்கேயும் பிரிவால் அழுது கொண்டிருக்கிறது
ஒரு ஒற்றைக் குயில்.
......
கொம்புள்ள மிருகத்தைக் கொம்பில்லா மிருகம் அடிக்கிறது
என்ன செய்யும் ஆயுதம்
......
வயிறு நிறைய வனம்
வயிற்றைத் தின்று விடாதே புலியிடம்கெஞ்சுகிறது
அகப்பட்ட மான்.
......
சக்திமான் அசோகன்
......
06-10-2024
.......
No comments:
Post a Comment