சக்திமான் அசோகன் கவிதைகள்-28
.................
நிலவைப் பிடிக்க
குளத்தில் வலை வீசுகிறார்கள்
கிடைத்தது மீன்.
........
அடைகாக்கும் ஆற்றை
மடை மாற்றுகிறார்கள்
அடியில் கூழாங்கல் முட்டைகள்
......
சிரிக்க முடியாமல்
நடக்கிறது ஒரு பிணம்
அதன் பெயர் நடை பிணம்
......
யாருடைய பாரம்
சுமந்து கொண்டிருக்கிறது
இந்த வண்டி மாடு.
......
கொடுத்த நேரத்துக்குள்
விளையாடாமல் கூடுதல் நேரம் கேட்கிறான்
விளையாட்டு வீரன்.
......
பசுவை ஏமாற்றி
பால் கறப்பதை விட கடினமானது
குதிரைக்குப் போடும் கடிவாளம்.
......
பாடிய ராகத்தையே
பாடிக் கொண்டிருக்கிறார் பாட்டு வாத்தியார்
எட்டிப் பார்க்கிறது எட்டாவது ராகம்
.......
குலுக்கிப் பார்க்கிறான்
கசக்கிப் பார்க்கிறான் காணவில்லை
பணத்துக்குள் சில்லறை.
......
அதிகம் குடித்தவனும்
அதிகம் படித்தவனும்
பேசுகிறான் தத்துவம்.
........
நூறுமீட்டர் ஓட்டப்பந்தயம்
ஒரு சிலர் ஓடி முடிக்கிறார்
பாதியில் விழுகிறார் பலர்.
......
சக்திமான் அசோகன்
......
08-10-2024
......
No comments:
Post a Comment