சக்திமான் அசோகன் கவிதைகள் -29
...........
அமாவாசை
அவன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறது
அந்தக் கருப்பு நிலா.
.......
ஒரே ஒரு பொய்
சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு சொல்லுகிறாள்
உன்னை நான் காதலிக்கிறேன்.
......
உள்ளுக்குள் வெயிலும் வருகிறது
மழையும் வருகிறது
ஓட்டைக் குடிசை.
......
ஏழு ராகம்
வண்ணம் பூசி சிரிக்கிறது
வானவில்.
......
விபூதி
மடிக்கக் கோயிலுக்குள் போகின்றன
பல்பொடி மடித்த பழைய நாள்காட்டிகள்
.....
பச்சை சொக்கா
ஈர மனம் இருக்கும் எந்த பாறைக்கும்
அணிவிக்கிறது
பாசி.
......
என்னைத் தெரிகிறது
எண்ணெய் தெரியவில்லை
எணணெய் குடம்.
.......
அக்கரையில் அவள்
இக்கரையில் இவன்
இடையில் எத்தனை அலைகள்
.....
அவள் உதட்டைச் சுழித்தாள்
இவன் உதட்டைப் பிதுக்கினான்
உடைந்தது?
.......
சூரியன்
பகலில் மறைந்தாலும் வருவதில்லை
நிலா
.......
சக்திமான் அசோகன்
......
10-10-2024
......
No comments:
Post a Comment