Friday, 11 October 2024

 சக்திமான் அசோகன் சிந்தனைகள்-30

.......

உன்னை நம்பு

அது தான்

உனக்குத் தெம்பு

.....

உன்னால் முடியும்

உன்னால் தான்

உலகம் விடியும்.

......

உடலில் குறை இருந்தாலும்

உள்ளத்தில்

மலை அளவு நம்பிக்கை வேண்டும்

.....

இருள் என்பது சரி பாதி தான்

பகல் என்பது

மறு பாதி தான்.

இரண்டும் சேர்ந்தது தான்

வாழ்க்கை போல ஒரு நாள்.

.....

இருளும் நிரந்தரமல்ல

பகலும் நிரந்தரமல்ல

எல்லாமே குறிப்பிட்ட காலம் வரை தான்

.....

கடலின் ஆழத்தைப் பற்றி

ஒருபோதும் கவலைப்படுவதில்லை

மிதக்கும் கப்பல்.

......

எல்லா பாதையும்

நமக்கு முன்னால் யாரோ ஒருவரால்

போடப்பட்டது தான்.

......

நீரைத் தேடி வேரும்

ஒளியைத் தேடி மரமும்

ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

ஓடுவது நின்று விட்டால்

வாடிவிடும் தாவரம்.

......

சக்திமான் அசோகன்

.....

11-10-224

.......




No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...