Saturday, 12 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 31

............

குழந்தையைப் போல

சிரிக்கிறது அந்தப் பைத்தியம்

வளர்ந்த குழந்தை.

........

விழுந்து விட்டன பால் பற்கள்

விழவே மறுக்கிறது

சோம்பல்.

.......

சந்தன மரத்தில் பொந்து செய்து காத்திருக்கிறது மரங்கொத்தி

உள்ளே வருகிறது ஒரு மீன்கொத்தி

.......

வீணை, புத்தகம்

இரண்டையும் வாசித்தேன்

இப்போது இரண்டும் என்னை வாசிக்கிறது.

.....

சட்டை சரியாகத்தான் இருக்கிறது

நான் தான் அதற்குச் சரியாக இல்லை

மாற்றம்.

......

நோயால் கெட்டவர்களை விட

வாயால் கெட்டவர்களே

மிக அதிகம்.

......

ஹனுமன் வாலை விட

அதிக நீளமானது

வாழ்ந்து கெட்டவன் கதை.

......

வருகிறேன் எனும் ஒருதலைக் காதலும்

தருகிறேன் எனும் கருமியின் வாயிலும்

வாழ்கிறது பொய்.

.......

சக்திமான் அசோகன்

......

12-10-2024

.......







No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...