Monday, 14 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 33

.........

சாம்பல் ஆடை

சற்றே விலக்குகிறது காற்று

நாணத்துடன் சிவக்கிறது நெருப்பு

.......

நாட்டுக்குள் யானை

பிளிறி அழைக்கிறது

காட்டுக்குள் தாய் யானை

......

கடலுக்கு

மேகம் விடும் தூது

ஆறு

.....

இரண்டு கரும்பாறைகளுக்கு

இடையில் ஓடுகிறது வெள்ளி ஆறு

தலைவகிடு.

.....

மடித்து வைக்க முடியவில்லை

விரிந்து கிடக்கும்

புல்வெளி

.....

திறக்கும் வரை

மதகைத் தட்டியபடி இருக்கிறது

அணைக்குள் நீரலை

......

பழைய வீட்டுக்கு திரும்பாமல்

புதிய வீடு கட்டுகிறது

சிறகு முளைத்த இளம்பறவை

......

கூண்டைத் திறந்த பிறகும்

கோழி வர மறுக்கிறது

கசாப்பு கடை.

.....

புழுகு மூட்டை சுமப்பவன்

வாயில் வீசுகிறது

அழுகிய முட்டை.

......

இத்தனை நாள் இந்த ஏழையின் வயிற்றில் இருந்தேன்

இப்போது அவன் சிதையில் இருக்கிறேன்

நான் தான் நெருப்பு.

......

சக்திமான் அசோகன்

.....

14-10-2024

......



No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...