Tuesday, 15 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 34

..........

குடிப்பது எப்படி

துட்டு அடிப்பது எப்படி என்பதை பாடத் திட்டத்தில் சேர்த்து விட்டால் படிக்காமலே முதல் மதிப்பெண் பெறுவார்கள் எங்கள் மாணவர்கள்.

.......


திருநெல்வேலிக்கேஅல்வா கொடுப்பவர்கள் 

இப்போது திருப்பதிக்கு கொடுக்கிறார்கள்

லட்டு.

......

எல்லா ஒப்பந்தபுள்ளி

பின்னாலும் இருக்கிறான்

ஒரு பெரும்புள்ளி.

.......


கண்ணீர் ததும்ப

கனவில் வருகிறார் காந்தி

கையில் திருவோடு.

.....

அழுக்கை கழுவிப் போகிறது

எப்போது பெய்யும் எங்கள் தேசத்தில்

பெருமழை.

..... 

சக்திமான் அசோகன்

.....

15-10-2024

.....




No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...