சக்திமான் அசோகன் கவிதைகள் 37
.........
வறுமை விற்று விட்டது உழுத வயலை
அதனால் விற்க முடியவில்லை உழவு மாடுகளை
வளர்த்த பாசம்.
.......
சேலை திருடிய ஏழைப் பெண்ணைத் தண்டிக்கவில்லை
நிர்வாணமாக நிற்கிறது
மாரியாத்தா வேப்பமரம்.
.......
அப்பாவின் தோளில் இருக்கும் குழந்தை
எகிறி எகிறி குதிக்கிறது
கடல் அலை தோளில் அமர்ந்த கப்பல்.
......
சக்திமான் அசோகன்
......
22-10-2024
......
No comments:
Post a Comment