சக்திமான் அசோகன் கவிதைகள் 38
..........
ஏழுகுதிரை தேர்
மூடுபனிக்குள் முட்டிக்கொண்டுத் தவிக்கிறது
முகம் காட்ட முடியாத சூரியன்.
.......
பசியுடன் குழந்தை அழுகிறது
பசி இல்லா குழந்தைக்குப் பால் சோறுடன் அலைகிறான்
கருணை இல்லாத கடவுள்.
.......
வானிலும் நீரிலும்
எப்போதும் மீன் தோழிகள்
நாணத்துடன் நிலவுப் பெண்.
........
சக்திமான் அசோகன்
......
23-10-2024
.......
No comments:
Post a Comment