Tuesday, 31 December 2024

Year End

 சக்திமான் அசோகன் கவிதைகள் 83

..............

எல்லோரும் போன பிறகு

ஏனோ ஒட்டிக் கொண்டிருக்கிறது ஒரு தாள்

என்னுடைய நாட்காட்டி

........

வருட கடைசி

கடைசியாக வருடுகிறேன்.

நன்றியுள்ள நாட்காட்டி.

.......

வரிசை கடைசியில் ஒரு ஆள்

வருத்தத்துடன் ஒரு தாள்

வயது முதிர்ந்த நாட்காட்டி.

.......

Daily one goes 

The last one in que 

Year end calendar.

.......

சக்திமான் அசோகன்

......

31-12-2024

......

Monday, 30 December 2024

Stolen Moon

 சக்திமான் அசோகன் கவிதைகள் 82

..........

குயில் கிலோ என்ன விலை

என்று கேட்பவரிடம் கோபப்படவில்லை சங்கீதம்.

.........

ஆற்றிலிருந்து

காற்று அள்ளி செல்கிறது

ஆலைத் தந்த பஞ்சுமிட்டாய்.

.......

அமாவாசை

உளவுத்துறை விழிக்கிறது

களவு போனது நிலவு.

.......

New Moon 

Detective wing depressed to discover 

Stolen Moon.

.......

சக்திமான் அசோகன்

.......

30-12-2024

.......

Saturday, 28 December 2024

Sunday

 சக்திமான் அசோகன் கவிதைகள் 81

..............

மலர் இதழ் பனித்துளி

துடைக்க வருகிறது வெயில்

மழலை இதழ் தாய்ப்பால் துளி

......

பதவி கொடுக்கவில்லையாம் 

பரிதாபமாய் திரும்பி போகிறது

காலில் விழுந்த கடலலை

.......

ஞாயிற்றுக்கு

ஞாயிறு இல்லை

பிரபஞ்ச தினசரி.

......

No Sunday 

For Sun 

Says daily calendar.

......

சக்திமான் அசோகன்

......

28-12-2024

......

Friday, 27 December 2024

Day and night

 சக்திமான் அசோகன் கவிதைகள் 80

...........

சத்துணவை மிச்சப்படுத்துகிறான்.

ஐந்துமைலுக்கு அப்பாலிருந்து கேட்கிறது

தங்கை பசியின் குரல்.

.........

அப்பா கட்சி

பிள்ளை கட்சி

நடுவில் தவிக்கிறது அம்மாபட்சி.

.......

பட்டப் பகல்

இமை மூடினால்

இருட்டு.

......

Bright Day 

Becomes night 

If eylid closed tight.

.......

சக்திமான் அசோகன்

...,....

27-12-2024

.......

Thursday, 26 December 2024

Me and my shadow

 சக்திமான் அசோகன் கவிதைகள் 79

............

எங்குமே

தடம் பதிக்கவில்லை

என்னைப்போல் என் நிழல்.

......

Everywhere, anywhere 

Never print footprint 

Me and My shadow.

......

கண்ணிவெடி இல்லை

கண்டுபிடித்து சொல்லும் சிப்பாய்

மின்கம்பி வடத்தில் அமரும் முதல் பறவை.

.......

முன்னாடி நிற்கிறேன்

முகம் காட்டத் தவிக்கிறது

பின்னாடி ரசம் இல்லாத நிலைக் கண்ணாடி.

.......

சக்திமான் அசோகன்

......

26-12-2024

......

Tuesday, 24 December 2024

The Lunatic.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 78

.............

The lunatic 

Leaves home 

Like Buddha.

.......

புத்தர் போலவே

வீட்டை விட்டு வெளியேறுகிறது

பைத்தியம்.

........

கடைசி துடிப்பு

இறுதியில் நினைத்துப் பார்க்கிறது

இதயத்தின் முதல் துடிப்பு.

......

கருப்பு இல்லை

கருமேகம்

சுரக்கும் பால்.

.......

சக்திமான் அசோகன்

......

24-12-2024

.......

Monday, 23 December 2024

Stolen diamonds

 சக்திமான் அசோகன் கவிதைகள் 77

......

வைகறையில் அணிந்திருந்த வைரம்

காணவில்லை மதியம்

தவிக்கிறது புல்.

.......

Morning I found ear ring diamonds 

Missing in the noon 

Shellshocked grass.

......

பட்ட பந்து

திரும்ப மறுக்கிறது

கொசு கொல்லி மட்டை..

......

சுடச்சுட

சுடுகாட்டு தீ சுவைத்து சாப்பிடுகிறது

பாட்டி சுட்ட சாணி புரோட்டா.

......

சக்திமான் அசோகன்

...... 

23-12-2024

......

Sunday, 22 December 2024

Keys

 சக்திமான் அசோகன் கவிதைகள் 76

.............

முதலில் சிரித்தது வாழை 

 முடிவில் சிரிக்கிறது

வீசப்பட்ட கருவேப்பிலை.

.......

வெள்ளந்தியாய் இருக்கும் ஓடை

விரும்புவதில்லை எந்த மீனும்

விரும்புகிறது கொக்கு.

........

கள்ள சாவி

வாழும் வரை யாரும் தேடுவதில்லை நல்ல சாவி.

.......

As long as 

Duplicate key lives 

No one needs original key.

.......

சக்திமான் அசோகன்

.......

22-12-2024

.......

Saturday, 21 December 2024

Beacon and ship

 சக்திமான் அசோகன் கவிதைகள் 75

.........

Though beacon invites 

Ship refuses to obey 

Enemy's bay.

......

கலங்கரை விளக்கம் அழைத்தும்

போகமறுக்கிறது கப்பல் 

அழைப்பது எதிரி நாடு.

.......

நடவுக்குத் தயார் 

நாணம் விட்டு சொல்கிறது நாற்றங்கால்

தயாரில்லை வயல்.

,.......

எங்கிருந்து வந்தது இளநீர் 

எங்கே போனது முற்றிய நெற்று

விழிக்கிறான் சீடன்.

.......

சக்திமான் அசோகன் 

.......

21-12-2024

.......

Friday, 20 December 2024

Green shelter

 சக்திமான் அசோகன் கவிதைகள் 74

..........

Tree

Become shelter to the rock 

Because it allows it's root.

.......

இடமளித்த பாறைக்குக்

கூரை ஆகிறது

அதில் முளைத்த மரம்.

.......

தப்பு தளத்தில் பிறந்த இசை

கண்ணீர் சிந்தி ரசிக்கிறது

குப்பைத்தொட்டி.

.......

துக்கத்திற்கு வந்த ஈக்களை 

விரட்டவில்லை

எச்சில் கையால் ஈ ஓட்டாதவன் பிணம்.

.......

சக்திமான் அசோகன்

.......

20-12-2024

......

Thursday, 19 December 2024

Sliding mountain.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 73

.........

அழைக்கவில்லை சேவல்

திரைக்குப் பின் காத்திருக்கிறான்

அரிதாரம் பூசிய கதிரவன்.

.......

எங்கே துப்புவது

என்பதைச் சொல்லத் தயங்குகிறது

இங்கே எச்சிலைத் துப்பாதே என்கிற பலகை.

......

அடை மழை

குடை பிடிக்க ஆளில்லை

உருகுகிறது மலை.

.......

Heavy rain 

No umbrella to prevent 

Sliding mountain.

......

சக்திமான் அசோகன்

.....

19-12-2024

......

Wednesday, 18 December 2024

Dews on the grass head

 சக்திமான் அசோகன் கவிதைகள் 72

...........

If love exceeds 

Never feel load 

Dews on the grass head.

.......

பாசம் மேலிடும் போது

பாரம் தெரிவதில்லை

பனித்துளி ஏந்திய புல் நுனி.

.......

உச்சியில் மொட்டு

உடுத்தியிருப்பது பசும்பட்டு

கல்லறை மேல் ரோஜா.

......

நத்தையின் கோடு

நாரையால் பாதியில் நிற்கிறது

நினைவு அறுந்த பிரிவு.

.......

சக்திமான் அசோகன்

.......

18-12-2024

........

Tuesday, 17 December 2024

ஆண்டாள் ஆகமம்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 71

.........

அர்த்த மண்டபத்தில்

ஆன்மீகத்தை விரட்டி வெளியேற்றுகிறது

ஆகம வன்முறை.

.......

அன்பின் உருவம் ஆண்டாள்

ஆகம விதி மீறுகிறாள்.

சூடிக்கொடுத்த மாலை.

.......

அனைவரும் சமம்

சட்டத்தைப் போல வளைகிறது சனாதனம்.

.......

சக்திமான் அசோகன் 

.......

17-12-2024

.......


Monday, 16 December 2024

Shadow of memory

 சக்திமான் அசோகன் கவிதைகள் 70

...............

Shadow stands behind its memory 

Zen asks the shadow 

Where is your memory?

.......

நினைவின் பின்னால் அதன் நிழல்

நிழலிடம் கேட்கிறேன்

எங்கே உன் நினைவு?

.......

ஏழைக் குடிசைக்குள்

இலவசமாக வருகிறது 

பணக்கார மாளிகையின்

சமையல் வாசனை.

........

நாணயம் போய் பணம் வந்தது

இரண்டும் போய் வருகிறது

ஜி பேய்.

........

சக்திமான் அசோகன்

........

16-12-2024

........

Saturday, 14 December 2024

All white blood

 சக்திமான் அசோகன் கவிதைகள் 69

...........

Sea asks 

Where the flood use to stay in the sky 

All white blood.

......

எங்கிருந்து வருகிறது

மேகத்தின் வெண்குருதி 

கேட்கிறது கடல்

.......

இருண்டு விட்டால் 

முடிந்து விடுமா வாழ்க்கை?

கேட்கிறது ஆந்தை.

.......

அக்னி தீர்த்தத்தில்

பரிகாரத்துக்கு குளித்தாலும் எரிவதில்லை

தீக்குச்சி.

........

சக்திமான் அசோகன்

......

14-12-2024

.......

Tuesday, 10 December 2024

மரம் ஒரு மரம்

 மரம் ஒரு வரம்

.........


வெட்டுகிற மனிதா

வெட்டுவதைச் சற்று நிறுத்து.

உற்றுப் பார் நான்

தனி மரம் அல்ல.

ஒரு சமுதாயம்.


அண்ணாந்து பார்

என் கிளையில் ஆயிரம் குருவிக்கூடு

அத்தனைக்குள்ளும்

வாய்ப்பிழக்கும் குஞ்சுகளும் முட்டைகளும் குளுவான்களும்.

நான் போன பிறகு

அத்தனையும் எங்கே போகும்.

அவற்றுக்கு இடம் தந்து விட்டு

என்னை வெட்டு.


உன்னை வெட்டும் போது

நீ போடும் சத்தம்

உலகுக்கே கேட்கும்.

என்னை நீ வெட்டும் போது

நான் போடும் சத்தம்

யாருக்கு கேட்கும்.?


பூ வைப்பார்

அதில் அமரும் தேனீயைப் பார்

அந்த ஈக்களுக்கு

போக்கிடம் தந்துவிட்டு

என்னை வெட்டு.


ஒரு சொட்டு தேனை

உன்னால் உருவாக்க முடியுமா?

உன் விஞ்ஞானத்துக்கு தான் தெரியுமா?

தெரிந்து விட்டு வெட்டு 

நான் சரிந்து போகிறேன்.


இலையைப் பார் அதில்

இருக்கும் பூவைப் பார்

அதன் ஒவ்வொரு கடிக்கும்

நான் துடிக்கும் துடிப்பைப் பார்.

பொறுத்துக் கொள்கிறேன்

நாளை நான் காண்பேன்

வண்ணத்துப்பூச்சியின் சுகப்பிரசவம்.

அவைகளுக்கு உணவளிக்கும்

இலையைப் படைக்கும்

விடை உன்னிடம் இருந்தால்

அறிவித்துவிட்டு என்னை வெட்டு.


பசியோடு வரும் பறவைக்கு

மிருகத்துக்கு ஏன் உனக்கும்

பசியாற்றும் பழம் தரும்

என்னை உன் இதயத்தை இறக்கி வைத்து விட்டு வெட்டு.

யாராவது ஒருவன்

இனி கனி தயாரிக்க முடியும்

என்று தெரிவித்து விட்டு 

என்னை வெட்டு

மரித்துப் போகிறேன்.


வெட்டிய களைப்பா மனிதா

கோடரியைக் கீழே போடு

என் நிழலில் அமரு.

தாகம் தீர்க்க நான் தரும்

இளநீரைப் பருகு.

களைப்பு தீர்ந்தவுடன் 

வேகமாக வெட்டு.


மூச்சு முட்டுகிறதா

காசு கேட்காமல்

நான் தருகிறேன் சுவாசிக்க

பிராணவாயு.

உயிரோடு வாழ் உலகோடு வாழ்

நாங்கள் எல்லாம் போன பிறகு

நீங்கள் வாழ வேண்டும்

அதற்கு கரியமில வாயுவை

உறிஞ்சி வாழ கண்டுபிடி

புதிய நுரையீரல்.

அதற்காகவாவது பயன்படட்டும்

உன் அறிவியல்.

........

சக்திமான் அசோகன்

.......

10-12-2024.

.......

Monday, 9 December 2024

The king

 சக்திமான் அசோகன் கவிதைகள் 68

.............

கண் இல்லாத அலைகளுக்குத் தெரியும்

கண்ணுள்ள மீனுக்குத் தெரிவதில்லை 

வலை

..........

If deer kills Lion  

Never the King  be its 

Prey.

மான்

முட்டிக் கொன்றாலும் மானுக்கு இரையாவதில்லை

சிங்கம்.

........

நடைபாதையில் நடுங்குபவனுக்கு

ஆடை தருவதில்லை

பாலுக்கு ஆடை தரும்

குளிர்.

.........

சக்திமான் அசோகன்

.......

09-12-2024

.........

Sunday, 8 December 2024

மிரண்டு தவிக்கிறது மலை.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 67

............

Who knows 

The voice of crying trees 

Its broken branch.

......

கிளை முறியும் போது

மரம் அழுவது யாருக்குத் தெரியும்

பிரிவு

.......

உருண்டு வரும் பாறை

எங்கே நிற்கும்

மிரண்டு தவிக்கிறது மலை.

.......

நதி பணிந்து போவதால்

வழி நடத்துகின்றன

கரைகள்.

.......

சக்திமான் அசோகன்

......

08-12-2024

.......

Saturday, 7 December 2024

அழையா விருந்தாளி

 சக்திமான் அசோகன் கவிதைகள் 66

..............

I am an uninvited guest 

That is my mistake 

Crying rain.

.......

அழையா விருந்தாளி

அதுதான் நான் செய்த பிழை

அழுகிறது மழை.

........

சுற்றி வரும் பூமி

எல்லோரிடமும் கேட்கிறது

எங்காவது மனிதனைக் காமி.

......

உதிர்ந்த இறகு

எடுத்துக்கொண்டு அலைகிறேன்

எங்கே அந்தப் பறவை.

......

சக்திமான் அசோகன்

......

07-12-2024

......

Friday, 6 December 2024

பனிக்குடம் உடைகிறது.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 65

...........

எதைக் கடந்தது

எனத் தெரியவில்லை

கரை கடந்தது புயல்.

........

மேகத்தின் 

பனிக்குடம் உடைகிறது

மழை பிரசவம் 

........

Heavy cloud

Tears amniotic sac 

Birth of new rain 

.........

குதிரை உயிர்

துடிக்கிறது

நடக்கிறது அஸ்வமேத யாகம்

........

சக்திமான் அசோகன்

........

06-12-2024

........

Monday, 2 December 2024

Crow and frog

 சக்திமான் அசோகன் கவிதைகள் 64

................

நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட தாழ்வு மண்டலத்தை

பொங்கி எழுகிறது

கடல்.

.........

தவளையின்

சீடன் ஆகிறது

இருளுக்குள் இருக்கும் காக்கை.

.........

ஒற்றைத் தென்னைக்கு

நட்டு வாங்கத்துடன் நடனம் கற்றுத் தருகிறது

புயல்.

........

Crow 

Becomes desciple of frog 

Makes noise in dark.

......

சக்திமான் அசோகன்

.....

02-12-2024

......

Sunday, 1 December 2024

அம்மா இதுதான் புயலா.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 63

..............

The fallen nest 

Wounded little bird asks 

Mom! Is this cyclone?

மரத்தின் சேலையை

உருவிப் போகிறது

துரியோதன புயல்.

.......

பிரித்து எறிந்த கூட்டிலிருந்து

குஞ்சு கேட்கிறது

அம்மா! இதுதான் புயலா?

.......

அள்ளித் தருகிறது மேகம்

அனுபவிக்கதெரியாமல் விழிக்கிறது

உலகம்.

.......

சக்திமான் அசோகன்

......

31-11-2024

......

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...