Friday, 24 January 2025

Father's dhoti.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 95

..........

வெள்ளை வேட்டி என்று அப்பா சொல்கிறார்

இல்லை பழுப்பு என்கிறது

வேர்வை நனைந்த அழுக்கு.

.......

Dad says it is white 

No it is dirt brown 

Argues sweat dirt.

.......

காற்றுக்குப் பயந்து

கூண்டுக்குள் அடைக்கிறார்கள்

காற்றைத் தேடுகிறது காதல் தீபம்.

........

Afraid over air 

Arrested it in room

Burning love torch demands wind.

.......

இமை இரண்டும் கரையானதால்

கன்னத்தில் பாய்கிறது

காட்டாறு.

.......

Both eye lids act as river bank 

So flood on dry chin 

Oh! Wild river.

......

சக்திமான் அசோகன்

.......

24-01-2025

........

Thursday, 23 January 2025

The sleepless river

 சக்திமான் அசோகன் கவிதைகள் 94

.............

காலாவதியான தூக்க மாத்திரை

விழுங்கி தூங்காமல் ஓடுகிறது

ஜீவநதி.

.........

Swallow and runs without sleep 

Sleeping pills crossed expire date 

The perennial river.

.......

காலி நாற்காலிகள்

கைகட்டி ரசிக்கின்றன

உள்ளூர் மேளம்.

........

Empty chairs 

Watching silent with fold hands

Local orchestra.

........

அத்தனையிலும் எம் குடும்பம் தெரியும்.

அப்பாவின் பனியனில்

ஆயிரம் வாசல் இதயம்.

........

Every hole shows our family pain

Thousands of pores 

on our father 's banyan.

........

சக்திமான் அசோகன்

......

23-01-2024

.......

India 

......

Monday, 20 January 2025

Broken statue

 சக்திமான் அசோகன் கவிதைகள் 93

..............

தலை துவட்டிய ஈரம்

இத்தனை வருடமாய் இன்னும் காயவில்லை

அம்மாவின் நைந்த முந்தானை.

........

மலை உடைத்து

சிலை செய்கிறார்கள்

சிலை உடைத்து எதை செய்வார்கள்?

.......

மகரந்த நெஞ்சை

மனம் திறந்து காட்டவே

மலர்கிறது மொட்டு.

.......

சக்திமான் அசோகன்

.......

20-01-2025

.......

Saturday, 18 January 2025

Persistence breeds success

 சக்திமான் அசோகன் கவிதைகள் 92

..........

விடா முயற்சி வெற்றி தரும்

கடலலையின் காதில் யாரோ ஓதிவிட்டார் 

வந்தது சுனாமி.😄

........

Persistence brings success 

Somebody whispers this to sea waves 

Birth of Tsunami.😄

........

புதைக்கப்பட்டது முளைக்கும் என்றது விதை

புதைக்கிறது முட்டையை

நம்பிக்கையுடன் ஆமை.

........

Burried Will grow says seed 

Bend and burying its eggs 

Mother tortoise.

.......

இருளிடம் ஒரு துளி எடுத்து

கருவிழி செய்தவன் ஏன் சூரியனை மறந்தான்

கேட்கிறார் பார்வையற்றவர்

.......

Pinch of dark carves my iris 

Then why HE forgotten light from Sun

Asks Blind man.

.......

சக்திமான் அசோகன்

......

Mangai Ashokan 

......

18-01-2025

.......

Wednesday, 15 January 2025

மா(ற்று )ட்டுப் பொங்கல்.

              மா(ட்டு)ற்றுப் பொங்கல்

              .      ...............


பட்டிக்காட்டு பட்டியில் கூட

பசு மாடுகளும் பல மாடுகளும்

இருந்தன என்பது பழங்கதை.


கழனியாவும் மனை ஆனபின்பு

எருதுக்கு என்ன வேலை?

பெருங்காயம் தீர்ந்த பிறகு

பெருங்காய டப்பாவுக்கு ஏதுவேலை

இருந்தாலும் மாட்டுப் பொங்கல்

இன்னும் இங்கே நடக்கிறது


வண்ண வண்ண நெட்டி மாலைகள்

கிண்ணம் நிறைய மஞ்சள் குங்குமம்

வழக்கம் போல வாங்கிவந்து

புறக்கடையில் நிற்கின்ற

கரும்பு தின்னாத

இரும்பு மாடுகளுக்கு

சூட்டி மகிழ்கிறான் தமிழன்.

டிராக்டர்களும் அவனைப் போற்றி மகிழும் 

மாடுகளைப் போல் மனம் இருந்தால்

சொல்லி அழும். மாமா

இனி மாட்டுப்பொங்கல்

மாற்றுப் பொங்கல் என அழைத்து மகிழ்வோம்.

ஆயுத பூஜை கொண்டாடுபவனுக்கு

மாற்றுப் பொங்கல் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.

புதியன புகுதலும்

பழையன கழிதலும் வழுவல

கால வகையினானே

என்று ஒரு தமிழன்

ஏற்கனவே சொல்லி விட்டான்.

.......

சக்திமான் அசோகன்

.......

15-01-2025

.......


Tuesday, 14 January 2025

பொங்கல் வாழ்த்து/ pongal greetings.

             பொங்கல் வாழ்த்து

                  ......................

எங்கெங்கு தமிழர்

பரவி வாழ்கிறாரோ

அங்கெல்லாம் பொங்கல் 

ஆனந்தமாய் பொங்குக.


அகிலமெங்கும் அமைதியும்

முகிலென அன்பும்

அனைத்து வளமும்

தங்கி தமிழ் ஓங்குக.


ஆதியில் பூமியில் 

பேசிய அன்னை தமிழே

மீண்டும் அனைவரையும்

ஓர் குடும்பம் ஆக்குவாய்.


நீதிவழுவா செந்தமிழே

நின்றாண்டு நாடுகளை

மானிடகுலத்தை மீள

கூடிவாழ வைப்பாயே.

.......

வாழ்வாங்கு வாழ

வளமும் நலமும் சூழ

மனமார வாழ்த்துகிறேன்.

வாழ்க! வாழ்க!  வாழியவே.!

......

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் 🙏

......

என்றென்றும் பேரன்புடன்

சக்திமான் அசோகன் 

Mangai Ashokan 

.......

India 

......

14-01-2025

........


Saturday, 11 January 2025

Love Birds

 சக்திமான் அசோகன் கவிதைகள் 91

............

சோளக்காட்டு பொம்மையின்

உச்சந் தலையில் கூடு கட்டுகிறது

ஓடிப்போன காதல் ஜோடி.

.......

On the head of cornfield Doll 

Spinning its own nest 

One love bird.

.......

இறங்க தெரிந்த ஆறு

ஏற முடியவில்லை

இன்னும் சமுதாய பள்ளம்.

.......

The river came down 

And refuse to go up

Still pits.

......

பாவம்!  ஒன்றுக்கும் வேலை கிடைக்கவில்லை

வானில் அலைகிறது

வாங்கிய பட்டம்.

......

Alas! No one gets job 

Wandering on sky top 

Bought kites.

......

சக்திமான் அசோகன்

......

11-01-2025

........



Friday, 10 January 2025

Seed in the bird's stomach.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 90

..............

வளமான நிலம் வறண்ட புலம்

எங்கே விழும்

பறவை தின்ற பழ விதை.

........

Fertile land flat dryland

Where will it fall 

The seed in bird's stomach..

.......

கடல் தாண்டிய தேசம் 

இனிக்கும் தேனிலவு கசக்கிறது

கடன் வாங்கி நடந்த கல்யாணம்.

.......

Sweet Honey moon 

Tastes bitter 

Marriage done with borrowed money.

......

பசித்த வயிற்றுடன் படுத்தவன்

விழிக்கும் போது வாய் நிறைய எச்சில்

கனவு முழுவதும் அறுசுவை உணவு

......

Slept with burning hungry 

Wake with mouthful saliva 

Variety of dishes in dream.

......

சக்திமான் அசோகன்

......

10-01-2025

.......

Thursday, 9 January 2025

அந்த சார்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 89

...........

எந்தத் தேர்தலுக்கும்

இனி இவர்தான் பொது வேட்பாளர்

அந்த சார்.

..........

கூவியும் விடியவில்லை

கோழியிடம் பயிற்சி எடுக்கிறது

குயில்.

..........

எட்டு ஊர் சனம் இழுத்தும்

இம்மி கூட தேர் நகரவில்லை

சக்கரத்தில் சாதி முட்டுக்கட்டை.

.........

சக்திமான் அசோகன்

........

09-01-2025

.........

Wednesday, 8 January 2025

Life is a beautiful garden

 சக்திமான் அசோகன் கவிதைகள் 88

............

Some flowers Cherish 

Few friends perish 

Life is beautiful garden.

......

மெருகாகும் சில உறவு

சருகாகும் சில உறவு

வாழ்க்கை ஒரு நந்தவனம்.

.......

One fountain is enough 

To makes oasis 

Deserted heart.

.......

ஒரு சுனை போதும்

சோலைவனம் ஆகும்

பாலைவனம்.

.......

Fallen dead leaf 

Hears cry from its mother tree

River bears with soaked eyes.

......

விழுந்த சருகை

சுமந்து செல்கிறது கண்ணீர் மல்க

ஆறு.

.......

சக்திமான் அசோகன் 

.......

08-01-2025

.......

Tuesday, 7 January 2025

The sheep came to market

 சக்திமான் அசோகன் கவிதைகள் 87

...........

Bearable pain when sculptor chiseling 

Unbearable 

When the hatred hammer's punching 

......

வலி தெரியவில்லை உளி செதுக்கும் போது

வலி தாங்க முடியவில்லை

சம்மட்டி உடைக்கும் போது.

.......

Puberty function for his master

To meet the expenditure 

The Goat came to market.

.......

வளர்த்தவளுக்கு சடங்கு

பரிசாக தன்னைத் தருகிறது

சந்தைக்கு வந்த கிடா.

.......

Wooden cave 

Stays incomplete 

Wounded nose woodpecker goes.

......

புது பொந்து

முடியாமல் பாதியில் நிற்கிறது

மூக்கு உடைந்த மரங்கொத்தி.

......

சக்திமான் அசோகன்

.......

07-01-2025

.......

Monday, 6 January 2025

Porcupine love

 சக்திமான் அசோகன் கவிதைகள் 86

..............

Thorn never punch 

When Bamboo to Bamboo hug 

Porcupine love.

.......

முள் குத்துவதில்லை

மூங்கிலை மூங்கில் தழுவுகிறது

முள்ளம்பன்றி காதல்.

.......

Sleep whole day 

But wake in night like moon

Owl.

.......

பகலில் தூங்கி 

இரவில் வரும் நிலவு

ஆந்தை.

.......

Many texts are here 

Hard to understand Divine book 

But easy to pillow magic.


பொருளுரை இருந்தும் புரியவில்லை திருமந்திரம் 

எதுவும் இன்றி புரிகிறது தலையணைமந்திரம்.

.......

சக்திமான் அசோகன் 

.......

06-01-2025

........

Sunday, 5 January 2025

Don't trace my heart.

           Where is my heart?

           .............................

             Mangai Ashokan 

                     ............


If anyone here,

Who finds my heart 


I don't know where I lost 

Never issue red alert to chase 


But I hope it will reach me fast 

It may be silent with destitutes lap


Oh! my downtrodden please return it 

If you find this globe as rescue nest 


Someone say it lies on earth's border

Where beautiful flowers hold it's shoulder 


Few search it in the middle of battle field 

There it heals wound of soldiers on bed 


It may be seen with people to hug peace 

Where bombshells missiles and tanks noise.


Tired souls may pick it in rivers and sea plasticful 

Where it cries and tears as rainfall to fill.


Detective eyes may see it with starving children 

Where distribute food with big spoon


It knows you may feel tired to trace 

No worry one day it will come with smiling face 


Leave it and let live with poor huts and thatched sheds dear 

Till  people get square meals and dress to wear.


One plea to you all not trace it again 

One day it will come to you when

 the earth without pain.


....... 

சக்திமான் அசோகன் 

......

Mangai Ashokan 

......

India 

......

05-01-2025

.....



Saturday, 4 January 2025

Mosquito relationship

 சக்திமான் அசோகன் கவிதைகள் 85

.............

As long as blood runs 

Our relationship continue 

Mosquito tells.

.......

உடம்பில் இரத்தம் 

இருக்கும் வரை தொடர்கிறது

கொசுவின் உறவு.

.......

தூரிகை கண்ணில் பட்டுவிட்டது

சிலிர்த்து சிமிட்டுகிறது

நான் வரையும் காரிகை.

.......

நகத்தை மட்டும் பார்த்து முழு உருவம் வரையும் வித்தகன்

அவனிடம் வருகிறது

ஒரு உதிர்ந்த சிறகு.

.......

சக்திமான் அசோகன்

.......

04-01-2025

........


Friday, 3 January 2025

Red carpet welcome.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 84

..............

வெண்பட்டு விரிந்த பனிமண்டலம்

தீச்சுவாலைக்குக் கிடைக்கிறது 

சிவப்புக் கம்பளம்.

.........

White silky snow meadows 

Hot fire enjoys 

Red carpet welcome.

......

எந்த வலையும் இல்லை தீபத்தில்

வந்து விழுகிறது

விட்டில் பூச்சி.

.......

உலுக்குகிறது மரத்தை

விழுகிறது தேனடை

தேனுக்கு ஆசைப்பட்ட யானை.

.......

கயிற்றில் நடக்கும் கலை கூத்தாடி

கை பிரம்பு போல் தள்ளாடுகிறது

தாத்தாவின் கைத்தடி.

.......

சக்திமான் அசோகன்

.......

03-01-2025

........

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...