Saturday, 17 May 2025

My shadow

 சக்திமான் அசோகன் கவிதைகள் 108

..........

கும்மிருட்டு

பயந்து எங்கோஒளிந்து இருக்கிறது

என் நிழல்.😒

.......

Heavy darkness 

Afraid and hide inside 

My shadow.😒

........

புனிதமான சன்னதி

யாருக்கும் இல்லை அனுமதி

தாயின் கருவறை.🙏

.......

Sacred sanctum

No permit to peep in

Mother's womb.🙏

........

காலையில் போனது

வருமா என்று தெரியவில்லை

சம்சாரத்துடன் மின்சாரம்.😄

........

Left in the morning 

Don't know when it returns

Electricity and my wife.😄

.......

சக்திமான் அசோகன்

17-05-2025

.........

Friday, 16 May 2025

பட்டம்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 107

.............

பகல் முழுதும் தேடுகிறது சூரியன்

இரவு முழுதும் அலசுகிறது நிலவு

அகப்படவில்லை மனிதன்.

.........

பாய்ந்த இடமெல்லாம் வீடு

பயிரைத் தேடி அலைகிறது

ஆறு.

........

நாதஸ்வரம்,  பறை 

வருத்தமுடன் அளிக்கிறது

வாசிப்பவனுக்குச் சாதி பட்டம்.

.........

சக்திமான் அசோகன்

........

16-05-2025

........

Wednesday, 7 May 2025

பூமாலை

 சக்திமான் அசோகன் கவிதைகள் 106

                    .........................

வரவேற்பு விழா

கோழி குஞ்சாக நசுங்குகிறது

தலைவர் காலில் மிதிபடும் பூ.

...........

கழுத்தில் சில நொடி

குப்பையில் பல மணி

பாவம் கஷ்டப்பட்டு கட்டிய பூ மாலை.

............

கதவு,பூட்டுஇல்லை களவும் இல்லை

உள்ளே காலியும் இல்லை

கல்லறை.

..........

சக்திமான் அசோகன்

.......

07-05-2025

........

Tuesday, 6 May 2025

ஓடிவரும் ஆறு

 சக்திமான் அசோகன் கவிதைகள் 105

                     ........................

கதவு பூட்டப்பட்டு இருக்கிறது

ஜன்னல் சாத்தப்பட்டிருக்கிறது

உள்ளே திறந்து இருக்கிறது மனம்.

.........

மலையில் பிறந்த ஆறு

மகிழ்ச்சியுடன் ஊருக்குள் வருகிறது

வரவேற்கிறது சாக்கடை.

.........

நீங்கள் கல் எறிவீர்கள்

அதற்காக காய்க்கத் தவறுவதில்லை

மரங்கள்.

..........

சக்திமான் அசோகன்

.........

06-05-2025

.........

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...