சக்திமான் அசோகன் கவிதைகள் 105
........................
கதவு பூட்டப்பட்டு இருக்கிறது
ஜன்னல் சாத்தப்பட்டிருக்கிறது
உள்ளே திறந்து இருக்கிறது மனம்.
.........
மலையில் பிறந்த ஆறு
மகிழ்ச்சியுடன் ஊருக்குள் வருகிறது
வரவேற்கிறது சாக்கடை.
.........
நீங்கள் கல் எறிவீர்கள்
அதற்காக காய்க்கத் தவறுவதில்லை
மரங்கள்.
..........
சக்திமான் அசோகன்
.........
06-05-2025
.........
No comments:
Post a Comment