சக்திமான் அசோகன் கவிதைகள் 107
.............
பகல் முழுதும் தேடுகிறது சூரியன்
இரவு முழுதும் அலசுகிறது நிலவு
அகப்படவில்லை மனிதன்.
.........
பாய்ந்த இடமெல்லாம் வீடு
பயிரைத் தேடி அலைகிறது
ஆறு.
........
நாதஸ்வரம், பறை
வருத்தமுடன் அளிக்கிறது
வாசிப்பவனுக்குச் சாதி பட்டம்.
.........
சக்திமான் அசோகன்
........
16-05-2025
........
No comments:
Post a Comment