Tuesday, 8 July 2025

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113

                   .............................

பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல்

நீதிபதி வீட்டில் பரவுகிறது

கருகியது கள்ளப்பணம்.

.............

தரையில் மணல்

மஸ்லின் நீரினால் மறைக்கிறது ஆறு

கரையில் கண்கொத்தி மணல் லாரி.

..............

இடி முழக்கத்திற்கு நடுங்காத வானம்

இப்போது நடுங்குகிறது

ஏவுகணை பாணம்.

.........

சக்திமான் அசோகன்

08-07-2025

..........


.

Thursday, 3 July 2025

சருகு

 சக்திமான் அசோகன் கவிதைகள் 112

                        ........................

என்னைப்போல் உன்னிடம்

ஈரம் இல்லை என்கிறது

சருகிடம் இலை.

..........

விஷம் தலைக்கு

ஏறும் வரை துடிக்கிறது

இதயம்.

...........

கரையைக் கடக்க

புயலைத் தேடுகின்றன

கடல் அலைகள்.

..........

சக்திமான் அசோகன்

..........

03-07-2025

..........

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...