சக்திமான் அசோகன் கவிதைகள் 112
........................
என்னைப்போல் உன்னிடம்
ஈரம் இல்லை என்கிறது
சருகிடம் இலை.
..........
விஷம் தலைக்கு
ஏறும் வரை துடிக்கிறது
இதயம்.
...........
கரையைக் கடக்க
புயலைத் தேடுகின்றன
கடல் அலைகள்.
..........
சக்திமான் அசோகன்
..........
03-07-2025
..........
No comments:
Post a Comment