Wednesday, 6 August 2025

வாமுசே புகழஞ்சலி

        வா மு சே வா மு சே 

           வரலாற்றைக் கொட்டுமுரசே.

                  ....................

கொடுவாள் மீசைக்காரர்

கொம்புத்தேன் பேச்சுக்காரர்

முதுகுளத்தூர் ஊருக்காரர்

முத்தமிழின் ஆசைக்காரர்


வாமுசே என்று அழைத்தால்

வாஞ்சையுடன் தழுவுபவர்

தாம் வாழும் காலம் வரை

தமிழுக்காக வாழ்ந்த மறவர்.


பாரினிலே தமிழை இவர்  

சேர்க்காத  நாடு இல்லை

கூர்க்காப்போல் தமிழை இவர்

காத்தோர் யாருமில்லை.


யாதும் ஊரே யாவரும் கேளிர்

சேதுக்காக எழுதியிருப்பாரோ 

எங்கள் சிவகங்கை பூங்குன்றன்.

கணிப்பதில் அவன் வல்லவன் அன்றோ


எங்காவது தமிழருக்கு

ஏதாவது இடையூறு என்றால்

இங்கிருந்து குரல் கொடுப்பார்

எழுந்து சென்று தோள் கொடுப்பார்


தொன்னூறு அகவையிலும் துடிப்போடு தமிழ் படிப்பார்

இன்னும் சில ஆண்டு எப்படியும் இருந்திடுவார்

என்றே எல்லோரும் நினைத்தார்


எங்கோ ஒரு தமிழனுக்கு

ஏதோ ஒரு இடையூறு 

எங்கோ நடந்திருக்கும்

இன்னுடலுடன் போவதற்கு 

அங்கே தடை இருக்கும்


அதனால் தன்னுடலை 

இங்கே விட்டு தான் மட்டும்

சென்றிருக்கிறார்

என்று நாம் நினைத்தாலும்

என்னவென்றே தெரியவில்லை

எங்கள் இரு விழியும் நனைகிறது.

எங்கள் கருவிழியும் அழுகிறது.


வாமுசே வாமுசே

வரலாறு கொட்டுமுரசே

திசையெட்டும் கொட்டும் முரசே

தமிழுக்காக ஒருவர் 

வாழ்ந்தார் என்று

திசையெட்டும் கொட்டும் முரசே.

.........

சக்திமான் அசோகன்

.......

No comments:

Post a Comment

வாமுசே புகழஞ்சலி

        வா மு சே வா மு சே             வரலாற்றைக் கொட்டுமுரசே.                   .................... கொடுவாள் மீசைக்காரர் கொம்புத்தேன் பேச்ச...